Sinhala (Sri Lanka)English (United Kingdom)

பின்னணி

2009 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி தொடங்கிய ஐந்தாவது மாகாண சபையின் முதலமைச்சின் கீழ் நிதி மற்றும் திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள், போக்குவரத்து, காணி, நீர்ப்பாசனம், பொருளாதார மேம்பாடு, கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்துறை ஆகிய பதின்மூன்று விடயப்பரப்புகள் அமுலாக்கப்படுகின்றன. அமைச்சின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களினதும் நிருவாக நடவடிக்கைகள் அமைச்சு செயலாளர் திரு. எல்.எல். அணில் விஜேசிரியின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. நான்காவது மாகாண சபையின் முதலமைச்சின் கீழ் நிலவிய சுற்றலாத்துறை மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி ஆகிய விடயங்கள் முறையே விவசாய அமைச்சுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கும் நீங்கிச் சென்று விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் நிலவிய கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விவசாய அமைச்சின் கீழ் நிலவிய நீர்ப்பாசனம் ஆகிய விடயங்களும் பொருளாதார மேம்பாடு எனும் புதிய விடயத்துறையும் ஐந்தாவது மாகாணசபையில் முதலமைச்சுடன் சேர்ந்ததன் மூலமாக மாகாணத்தின் அபிவிருத்திக்கு அதிக பங்களிப்பினை வழங்குவதற்கான வாய்ப்பு உரித்தாகியுள்ளது.

 
ஏப்ரயில் 2024
S M T W T F S
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 1 2 3 4