Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு எம்மைப் பற்றி அமைச்சின் நோக்கங்களும் பிரதான செயற்பாடுகளும்

அமைச்சின் நோக்கங்களும் பிரதான செயற்பாடுகளும்

நிதி, திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும்
மாகாணத்தின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்கின்ற சிறந்த நிதிக் கொள்கையொன்றைத் தாயாரித்து அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்த மக்கள் நேயமுள்ள திட்டமிடல் சேவையை வழங்கி ஒவ்வொரு பிரசையினதும் மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நல்லதொரு சமூகத்தை தாபித்து மாகாணத்தின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வதே எமது நோக்கமாகும்.

கல்வி
ஊவா மாகணத்தின் அனைத்துப் பிள்ளைகளினதும் கல்வியை அனைத்து மக்களினதும் அறிவினையும் பண்பினையும் வளர்ப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் அபிவிருத்தி செய்வதன் ஊடாக நற்பிரசைகளை உருவாக்கல்.

  • கல்விக்கான புகுமுகத்தையும் சம வாய்ப்பினையும் வழங்குதல்,
  • கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்,
  • கல்வி வளங்களை வினைத்திறனும் பயனுறுதியும் கொண்டதாக பகிர்ந்தளித்தல்,
  • கல்விச் சேவை வலையமைப்பினைப் பலப்படுத்துதல்.

பொருளாதார மேம்பாட்டுப் பணிகள்

ஊவாவின் அனைத்து மக்கட் குழுக்களினதும் பொருளாதார மட்டத்தை மேம்படுத்துகின்ற சிறந்த பொருளாதார மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தை அமுலாக்கல்,

  • மாகாணத்தின் சுயதொழில் வாய்ப்பு மேம்பாடு
  • ஊவா கைத்தொழிலாளர்களை ஊக்குவித்தல்
  • முதனிலை உற்பத்திகளுக்கு பெறுமதி சேர்க்கும் கருத்திட்டங்களை அறிமுகஞ்
    செய்தல் (விவசாயம், வெட்டுமரம், இரத்தினம் போன்றவை)
  • உள்நாட்டு – வெளிநாட்டு முதலீட்டாளர்களை மாகாணத்தில் முதலீPடு செய்ய  ஊக்குவித்தல்
  • ஊவாவில் சுற்றுலாத்துறைக் கைத்தொழிலை முன்னேற்றுதல்
  • ஊவா குடிசைக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக கைத்தொழில்
    உரிமையாளர்களைத் தூண்டுதல்.

காணி அலுவல்கள்
சுற்றாடலின் சமநிலையைப் பாதுகாத்து வரையறுக்கப்பட்ட காணி வளத்தை  வினைத்திறனும் பயனுறுதியும் மிக்கதாகப் பிரயோகித்து ஊவா மாகாண மக்களின்  காணி அபிவிருத்திக்ககாப் பங்களிப்புச் செய்தல்,

  • மாகாண மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள மற்றும் அரசாங்கத்தின் அபிவிருத்தி செய்யப்படாத காணிகளை அபிவிருத்தி செய்தல்,
  • அரசாங்கத்தின் ஒதுக்குக்  காணிகளை முறையாக இனங்கண்டு பேணுவதன் மூலமாக சுற்றாடலுக்கு ஏற்படுகின்ற சேதங்களைக் குறைத்தல்,
  • தெரிவு செய்யப்பட்ட காணிகளின் மண் பேணல்,
  • காணித் தரவுகள் பற்றிய வங்கியினைத் தாபிப்பபதனூடாக காணி உரிமை மற்றும் பயன்பாடு பற்றிய தகவல்களை உடனடியாகப் பெற்றுக்கொடுத்தல்,
  • நீரேந்துப் பரப்புக்களைப் பேணுதல்,
  • காணியற்ற மக்களுக்கு காணியுரிமையை வழங்குதல்.


போக்குவரத்து நடவடிக்கைகள்
ஒழுங்கான போக்குவரத்துக் கொள்கையினூடாக மக்கள் நேயமுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட போக்குவரத்து வலையமைப்பினை உருவாக்குதல்,

  • பயணிகளுக்குத் தரம்மிக்க சேவை வசதிகளை வழங்குதல்
  • பயணிகள் சேவைகளை முன்னேற்றுதல் 

கலாசார அலுவல்கள்
அனைத்து மக்கட் குழுக்களினதும் கலை மற்றும் கலாசாரப் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதன் மூலமாக ஊவா மாகாணத்தில் வசிக்கும் மக்கட் குழுக்களின் கலாசார ரீதியான புத்துயிர்ப்பினை ஏற்படுத்துதல்.

பிரதான நிர்மாணத்துறை, பொறியல் சேவை – பதுளை
மாகாண பொறிமுறை எந்திரவியலாளர் அலுவலகம் - தியதலாவ
(பிரதிப் பிரதம செயலாளரின் (பொறியியல் சேவைகள்) கீழ் நிருவகிக்கப்படுகின்றது.)

ஊவா மாகாண சபைக்குச் சொந்தமான கட்டிடங்கள், வீதிகள் மற்றும் சிறிய நீர்ப்பாசனம், நிர்மாணிப்பு, மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுடன் தொடர்புடைய சேவை வழங்குநர்களின் தேவையுடன் ஒத்துவரக்கூடிய வகையில் சிறந்த நிர்வாகத்தைக் கொண்டதாக உரிய காலப்பகுதி மற்றும் நிதியேற்பாட்டில் ஈடேற்றுதல்.

  • ஊவா மாகாண சபையின் கீழ் நிலவுகின்ற கட்டிடங்கள், வீதிகள் மற்றும் சிறிய நீர்ப்பாசனம் தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் அமுலாக்குவதை இணைப்பாக்கம் செய்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் முன்னேற்றக் கட்டுப்பாடு,
  • ஒப்பந்த நிர்வாகம், வேலை மேற்பார்வை, தரக்கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகளை வழங்குதல்,
  • நிர்மாணப் பணிகளுக்கு அவசியமான பொறித்தொகுதிகளை வழங்குதல், ஊவா மாகாண சபையின் வாகனங்களைப் பழுதுபார்த்தல் மற்றும் அவசியமேற்படும்போது அவை பற்றி பொறிமுறை எந்திரவியலாளர்களுக்கு விதப்புரைகளைச் சமர்ப்பித்தல்,
  • பிரதம பொறியியலாளர் மற்றும் நிர்மாண சேவைகள் அலுவலகத்திலும் பிரதேச பொது வேலைகள் அலுவலகங்களினதும் நிதிக்கட்டுப்பாடு மற்றும் கணக்குச் செயற்பாடுகளைப் பேணி வருதலும் மேற்பார்வையும்.

ஊவா மாகாண அச்சகம் - கெப்பெட்டிபொல
ஊவா மாகாணத்தில் அனைத்து அரச நிறுவனங்களினதும் காகிதாதிகளின் அச்சிடல் பணிகளை நியாயமான விலையிலும் பயனுறுதியும் வினைத்திறனும் மிக்கதாக அச்சிடல்.

நூலக சேவைகள் சபை – பதுளை

ஊவா மாகாணத்திற்கு தனித்துவமான தகவல் வளங்களை ஊவாவின் பெருமைiயும் வரலாற்றுரீதியான பின்னணியையும் குறிக்கக்கூடிய வகையில் நவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பலத்தினூடாக ஊவாவின் மனித வளங்ளை வலுப்படுத்துவற்காக, ஊவாவில் நூலக தகவல் தொழில்நுட்பத்தையும் வெளியீட்டுத் துறையையும் ஒன்றுக்கொன்று கட்டிவளர்க்கத்தக்கதாக அபிவிருத்தி செய்தல்.

ஊவா சமுதாய வானொலி – பண்டாரவெல
ஊவா மாகாண மக்கள் வாழ்க்கையின் தரரீதியான மேம்பாட்டுக்கு காரணமாக அமைகின்ற தகவல் பரிமாற்ற தொடர்பாடல் தேவைப்பாடுகளையும் புதிய தகவல் தொழில்நுட்பத்தையும் முழுச் சமுதாயத்திற்கும் பெற்றுக்கொடுப்பதற்காக சமுதாய வானொலி சேவையெனும் வகையில் ஊவா சமுதாய வானொலியை நிறுவி பேணப்பட்டு வருகின்றது.

கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி
ஊவா மாகாணத்தின் பௌதீக மற்றும் மனித வளங்களை உச்சமட்டத்தில் பாவனைக்கு எடுத்து கிராமிய சமுதாயத்திற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளைப் பூர்த்தி செய்தலும் கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதலும்.

மாகாண இறைவரித் திணைக்களம்
ஊவா மாகாண சபையினால் ஈடேற்றப்படுகின்ற சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளை வெற்றியீட்டச் செய்ய அவசியமான நிதிசார் வளங்களை சேகரித்தக் கொடுப்பதற்காக வினைத்திறன் மிக்கதும் விட்டுக்கொடுப்புமிக்கதுமான சுமுகமான சேவையை வழங்கி ஊவா மகாணத்தின் மக்களுக்கு சௌபாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுக்க பங்களிப்புச் செய்தல்.

  • ஊவா மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாட்டுக்கு அவசியமான நிதிசார் வளங்களை
    ஈட்டிக் கொள்ளல்.
  • மாகாணத்தில் பேணப்பட்டு வருகின்ற ஒவ்வொரு கருத்திட்ட நிலையத்தையும் பரிசோதனைக்கு உட்படுத்தி சேகரிக்கப்படவேண்டிய புரள்வு வரி வருமானத்தை விருத்தி செய்துகொள்ளல்.

நீர்ப்பாசனத் திணைக்களம்
ஊவா மாகாண மக்களின் நிலைபேறான சமூக, பொருளாதார அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்;காக சிறிய நீர்ப்பாசன புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புடன் தொடர்புடைய பணிகளை வினைத்திறனும் பயனுறுதியும் மிக்கதாக நெறிப்படுத்துதலும் இணைப்பாக்கம் செய்தலும்.

உள்ளூராட்சி
நியதிச் சட்டமுறையில் கையளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் உள்ளூராட்சி நிறுவனங்களின் வினைத்திறமையும் பயனுறுதியையும் மேம்படுத்த அவசியமான அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் வழங்குவதன் ஊடாக ஊவா மாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவுதல்.

  • உள்ளூராட்சி நிறுவனங்களின் தாபனப் பலத்தை விருத்தி செய்தல்,
  • உள்ளூராட்சி நிறுவனங்களின் நியாயாதிக்கப் பிரதேசங்களின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு அவசியமான ஒத்துழைப்பினை வழங்குதல்,
  • உள்ளூராட்சி நிறுவனங்களின் நிதிக் கட்டுப்பாடு, நிர்வாகத்தை ஒழுங்குறுத்துதல் மற்றும் அதனூடாக ஒழுக்காற்று விசாரணைகளினதும் கணக்காய்வுக் கேள்விகளினதும் எண்ணிக்கையைக் குறைத்தல்,
  • உள்ளூராட்சி நிறுவனங்களின் புதிய வருமான வழிவகைகளைத் தேடிக்கொள்ள உதவுதலும் அதற்கு அவசியமான சட்ட ஆலோசனைகளை வழங்குதலும்.

கலாசார அமைச்சு

அனைத்து மக்கட் பிரிவுகளினதும் கலை, கலாசாரப் பாரம்பரியங்களைப் பாதுகாத்தலினூடாக ஊவா மாகாணத்தில் வசிக்கின்ற மக்கட் குழுக்களின் கலாசார புத்துயிர்ப்பினை ஏற்படுத்துதல்.

  • ஊவாவின் பண்டைய கலை, கலாசாரப் பாரம்பரியங்களைப் பாதுகாத்தல்,
  • உள்நாட்டு மற்றும் உலகளாவிய கலைப் பாரம்பரியங்களை மாகாண வாசிகளிடையே பிரபல்யம் அடையச் செய்தல்,
  • ஊவாவின் பாரம்பரிய புதிய கலைஞர்களை ஊக்குவித்தலும் மதிப்பீடு செய்தலும்,
  • ஊவாவின் கலை விளை நிலத்தில் பயிர்செய்வதற்கு அவசியமான வசதிகளை வழங்குதல்,
  • பூர்வீகக் குடிகளைப் பேணுதலும் அவர்களின் சகவாழ்வுக்கு உறுதுணையாக இருத்தலும்.
 
ஏப்ரயில் 2024
S M T W T F S
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 1 2 3 4