Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு கேள்விகளும் பதில்களும்
கேள்வியும் பதில்களும்

கேள்விகளும் பதில்களும்

  1. முதலமைச்சர் நிதியம் மூலமாக வழங்கப்படுகின்ற உதவிகள் யாவை?

    • தீவிரமான நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ள ஆட்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் மருத்துவ உதவிகளை வழங்குதல்,
    • குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை  மாணவ, மாணவியருக்கான உதவிகளை வழங்குதல்.
    • சமய அலுவல்களின் மேம்பாட்டுக்காக மதவழிபாட்டு நிலையங்களுக்கு உதவி வழங்குதல்.         
  2. கல்வி அமைச்சு மூலமாக வழங்கப்படுகின்ற புலமைப்பரிசில்கள் யாவை?

    • 'சிசு சுரெக்கும்' புலமைப்பரிசில் உதவி நிகழ்ச்சித்திட்டம் - பெற்றோர்களை இழந்த பாடசாலைச் சிறார்களுக்காக ஒரு மாணவனுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 5,000/- பணத்தொகையை வழங்குதல்,
    • பதுளை மற்றும் மொனறாகல ஆகிய இரண்டு மாவட்டங்களிலிருந்தும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் மிகச் சிறப்பாக சித்தியடைந்த எட்டு மாணவர்களுக்காக ஒரு மாணவனுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 10,000/- பணத்தொகையை வழங்குதல்,
    • ஊவா பல்கலைக்கழகத்தின் வதிவிட மாணவரொருவருக்கு ஆண்டுக்கு ரூ. 5,000/- உதவித்தொகையை வழங்குதல்,
  3. அமைச்சின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற பாடசாலைகளுக்கும் ஏனைய நிறுவனங்களுக்குமென கட்டிடங்களைப் பெற்றுக்கொள்ளல், நிலவுகின்ற கட்டிடங்களைப் பழுது பார்த்தல் மற்றும் மரத்தளபாடங்களைப் பெற்றுக்கொள்வதற்காக எவரிடம் அறிவிக்க வேண்டும்?

    • கௌரவ முதலமைச்சர்/ செயலாளர், முதலமைச்சு/ உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்), முதலமைச்சு.
  4. அமைச்சின் கீழ் பணியாற்றுகின்ற உத்தியோகத்தரொருவர் வெளிநாடு செல்வதற்கான லீவு பெறும்போது சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்களும்  அவை முதலமைச்சுக்கு கிடைக்கவேண்டிய காலவரையறைகளும் யாவை?

    • ஆவணங்கள்
      கோரிக்கைக் கடிதம்
      அழைப்புக் கடிதம்
      பூர்த்தி செய்யப்பட்ட பொது 126 மாதிரிப்படிவம்
      கடவுச்சீட்டு
      பிரசை அடையாள அட்டையின் பிரதி
      வேலையையும் உள்ளடக்கிச் செய்வதற்கான கடிதம்
      உத்தியோகத்தர் ஒரு மாதத்துக்கு மேலாக வெளிநாட்டில்  தங்கியிருப்பாராயின் அல்லது சம்பளத்துடனான புலமைப்பரிசிலுக்காக வெளிநாடு செல்வாராயின் அல்லது உத்தியோகத்தர் தகுதிகாண் காலப்பகுதியில் வெளிநாடு செல்வாராயின் ஒவ்வொரு விடயம் தொடர்பிலும் தனித்தனியான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடல் வேண்டும். (மேற்படி அனைத்து ஆவணங்களிலும் ஐந்து பிரதிகள் வீதம் சமர்ப்பித்தல் வேண்டும்.)
       

    • காலவரையறை
      உத்தியோகத்தர் வெளிநாடு செல்ல குறைந்த பட்சம் பத்து நாட்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட விண்ணப்பப்பத்திரம் அமைச்சுக்கு கிடைத்தல் வேண்டும்.

 
மே 2024
S M T W T F S
28 29 30 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1